Wednesday, February 10, 2010

சிதறிய கண்ணாடி தூகள்கள்.. 1

"ஒரு கையில் மது, மறு கையில் மாது" கண்ணதாசன் கூற்றை கூற..
என் இனியவள் "ஒரு கையில் விளக்குமாறு, மறு கையில் அகப்பை" என்றாலே..

Friday, May 15, 2009

மாய உலகின் சக்கரம்

கருத்த கானகம்
எட்டிய தூரமெங்கும்
நெடிந்து வளர்ந்த மரங்கள்
காட்டின் நடுவெ ஒரு
குட்டிக் குடும்பம்..

குடிசை இல்லையெனினும்
கும்மாளத்துக்கு குரையில்லை
ஆடைக்கு போராடினாலும்
அடுத்தவேளை உணவுக்கு பஞ்சமில்லை
அமைதியாக
ஆனந்தமாக வாழ்வை
அன்பின் எல்லைவரை அள்ளிச் சென்றன..

அவர்களின் ஆனந்தம்
அந்தக் கானக சொந்தக்காரியால் பொறுக்கமுடியவில்லை
அந்த ஒரு நாள்
தரை அதிர்தது
கிளைகள் இல்லா மரங்கள் கிளர்ந்தெழுந்தன
அயல் வீட்டு
அன்பழகு 'சுனாமி..சுனாமி..' என
கூச்சலிட
அறிந்து எழும்பமுன்
கண்ணெதிரே
கரும் அலை உருண்டுவந்தது...

"அய்யோ அம்மா.. பேன்.. பேன்"
அனிதா கூச்சலிட
அம்மா மறுபடியும்
அந்த கரும் சீப்பை
அந்த கரும் சிகைக்குள்
வாரினாள்...

Thursday, February 12, 2009

தனிமை.. அமைதியின் விளிம்பில்..

ஆழ்மனத்தை,
அலசும் நேரம்..
இருட்டறையில்,
அறியாத ஒன்றை புரியாமல்
தேடும் நேரம்..
தேடுகையில் அகப்பட்டதொன்று,

வறுமையில் தனிமை,
உழைப்பின் ஊதியத்தின் நினைப்பில்..

இசையில் தனிமை,
விழிகளில் பூக்கும் நீர்த்துளியின் நினைப்பில்..

கடமையில் தனிமை,
இழந்த மகிழ்ச்சியின் நினைப்பில்..

பயணத்தில் தனிமை,
பக்கத்து இருக்கை நங்கையின் நினைப்பில்..

மழையில் தனிமை,
மழழை மொழியில் மூழ்கும் நினைப்பில்..

இருளில் தனிமை,
நேசித்தவளின் தொலைத்த அன்பின் நினைப்பில்..

போதையில் தனிமை,
பாதையில் இடரிய வடுவின் நினைப்பில்..

வலியில் தனிமை,
அதை விதைத்தவளின் நினைப்பில்..

தனிமை,
தன்னை தானே அறியும் நிலை,
அமைதி விளிம்பின் இனிமை,
இருட்டறையில் சிக்கிய மெழுகுதிரி...
அடுத்து தேடவேண்டியது
தீக்குச்சிதான்....

Friday, October 17, 2008

புது புடவையில் அமுதா...

அசுர வேக பஸ்ஸிலே
அலை அடிக்கும் கூட்டத்தின் நடுவே
அரை அடி உயர செப்பலினால் மிதிபட
பிடித்திருப்பது பிடியா இல்லை இடையா என்று தவிக்கையில்...
அங்கே...
அவள்...
புயலில் சிக்கிய பூவானாலும்.. இன்னும் அதே ரம்மிய வாசனை...
குளிர்ந்த நீரையும் சூடாக்கும் அதே பார்வை...
நஞ்சையும் அமுதமாக்கும் அதே உதடுகள்...
அவளேதான்.. அமுதா..
அன்று ஜின்ஸில் இன்று புடவையில்..
அழகுக்கு அர்த்தம் அமுதாவா... இல்லை
அவளே அழகுக்கு சான்றா...
குழம்பியது அறிவா... வயதா...
மிதிபடுவது பாதமா... பருவமா...
பொங்கும் சனத்தின் மத்தியிலும்
அவள்

சலனமின்றி நின்றாள்..
புதுப்பொழிவுடன்..
புடவை போஸ்டரில்
நடிகை அமுதா!!!!

Sunday, August 31, 2008

போதையின் பாதை..

யோகிக்கு போதை உண்மையின் மேல்..
பூசாரிக்கு போதை உண்டியலின் மேல்..

தலைவனுக்கு போதை நாற்காலியின் மேல்..
தொண்டர்களுக்கு போதை தலைவனின் மேல்..

நடிகனுக்கு போதை House Full ன் மேல்..
நடிகைக்கு போதை மேனியின் மேல்..

ஏழைக்கு போதை பணத்தின் மேல்..
கோழைக்கு போதை கனவின் மேல்..

அவனுக்கு போதை அவளின் மேல்..
அவளுக்கு போதை அவன் status மேல்..

எனக்கு போதை அவள் கண்கள் மேல்..
கண்களுக்கு போதை காலத்தின் மேல்..

போதைக்கு போதை போகும் பாதையின் மேல்..
பாதையின் போதை பூஜ்ஜியதின் மேல்..!!

Sunday, July 20, 2008

பாரதிக்கு புகழ்.. எமக்கு...

"ஓடி விளையாடு பாப்பா".. என்று
பாரதி பாடினார்.. பதிலாக
போற்றியது உலகம்!

பதினெட்டேயான miss ஒன்று
பஸ்சை miss பண்ணியபோது
"ஓடி வந்து பஸ் ஏறு பாப்பா".. என்று
பருவ மைந்தர் பாடினால்.. பதிலாக
செப்பல் அல்லவா வருகிறது!!!

Saturday, July 12, 2008

அழகி வீட்டு றோஜா பூ..

அழகான தோட்டம்
அதன் நடுவே நான்
அந்தத்தில் ஒரு யன்னல்
அதனுடே ஒரு மின்னல்..

அழகிய கள்ளி அவள்
என்னை அள்ளிவிட
காதல் கடலில் தள்ளிவிட
உள்ளத்தை கிள்ளிவிட
துள்ளி வருவாள்..

என் முள்பட்டு
என்னவள் 'அ' என்று சினுங்க
'ஆஆ' என்று அலறியது
என் ஆழ்மனம்
உடனே அருகிலிருக்கும் துரோகியை
உடன் அழைத்து சென்றாள்..

சிதைந்தது மனம்
இருந்தாலும் சித்திரம் போல் அவள்
சிறகடித்து பறந்தாள்
அவள் சரளம் நோக்கி
காத்திருந்தேன்...

மாலையானது
இரண்டு கருவண்டுகள் என்னை நோக்கின
என்ன பார்வை!!
அன்று புரிந்தேன்
பருவ நாயகர்களின்
பரிதவிக்கும் நிலையை..

வருடினாள்
இதழோடு இதழ் சேர்த்தாள்
அள்ளினாள்
தென்றலில் நடனமாடிய கூந்தலோடு
என்னை இணைத்தாள்..

இருள் கவ்வியது
விழா விழித்துக்கொண்டது
விழுந்தனர் பலர்
எம் இணைவை கண்டு..
புகழ்தனர் பலர்
என்னால் மேலும் அழகன அவளைக்கண்டு..
களிப்பில் முழ்கி
நாளை கனவுகளுடன்
கண்ணயர்ந்தேன்..

விழித்தேன்
பரிதவித்தேன்
பாதகி..
என்னை குப்பையில் வீசிவிட்டாள்
ஏன்? என்றேன்
வாடிவிட்டாய் என்றாள்
நாடி வந்தது நீயல்லவோ!! என்றேன்
அது நேற்று என்றாள்
குரல் அடைத்தது
உயிர் வலித்தது
விழி கனத்தது
ஏனோ அழமுடியவில்லை..
எதிரே அழுக்குச் சுவரில் ஒரு வாசகம்
"நீர்குமிழி வாழ்க்கை!!"