Friday, October 17, 2008

புது புடவையில் அமுதா...

அசுர வேக பஸ்ஸிலே
அலை அடிக்கும் கூட்டத்தின் நடுவே
அரை அடி உயர செப்பலினால் மிதிபட
பிடித்திருப்பது பிடியா இல்லை இடையா என்று தவிக்கையில்...
அங்கே...
அவள்...
புயலில் சிக்கிய பூவானாலும்.. இன்னும் அதே ரம்மிய வாசனை...
குளிர்ந்த நீரையும் சூடாக்கும் அதே பார்வை...
நஞ்சையும் அமுதமாக்கும் அதே உதடுகள்...
அவளேதான்.. அமுதா..
அன்று ஜின்ஸில் இன்று புடவையில்..
அழகுக்கு அர்த்தம் அமுதாவா... இல்லை
அவளே அழகுக்கு சான்றா...
குழம்பியது அறிவா... வயதா...
மிதிபடுவது பாதமா... பருவமா...
பொங்கும் சனத்தின் மத்தியிலும்
அவள்

சலனமின்றி நின்றாள்..
புதுப்பொழிவுடன்..
புடவை போஸ்டரில்
நடிகை அமுதா!!!!

Sunday, August 31, 2008

போதையின் பாதை..

யோகிக்கு போதை உண்மையின் மேல்..
பூசாரிக்கு போதை உண்டியலின் மேல்..

தலைவனுக்கு போதை நாற்காலியின் மேல்..
தொண்டர்களுக்கு போதை தலைவனின் மேல்..

நடிகனுக்கு போதை House Full ன் மேல்..
நடிகைக்கு போதை மேனியின் மேல்..

ஏழைக்கு போதை பணத்தின் மேல்..
கோழைக்கு போதை கனவின் மேல்..

அவனுக்கு போதை அவளின் மேல்..
அவளுக்கு போதை அவன் status மேல்..

எனக்கு போதை அவள் கண்கள் மேல்..
கண்களுக்கு போதை காலத்தின் மேல்..

போதைக்கு போதை போகும் பாதையின் மேல்..
பாதையின் போதை பூஜ்ஜியதின் மேல்..!!

Sunday, July 20, 2008

பாரதிக்கு புகழ்.. எமக்கு...

"ஓடி விளையாடு பாப்பா".. என்று
பாரதி பாடினார்.. பதிலாக
போற்றியது உலகம்!

பதினெட்டேயான miss ஒன்று
பஸ்சை miss பண்ணியபோது
"ஓடி வந்து பஸ் ஏறு பாப்பா".. என்று
பருவ மைந்தர் பாடினால்.. பதிலாக
செப்பல் அல்லவா வருகிறது!!!

Saturday, July 12, 2008

அழகி வீட்டு றோஜா பூ..

அழகான தோட்டம்
அதன் நடுவே நான்
அந்தத்தில் ஒரு யன்னல்
அதனுடே ஒரு மின்னல்..

அழகிய கள்ளி அவள்
என்னை அள்ளிவிட
காதல் கடலில் தள்ளிவிட
உள்ளத்தை கிள்ளிவிட
துள்ளி வருவாள்..

என் முள்பட்டு
என்னவள் 'அ' என்று சினுங்க
'ஆஆ' என்று அலறியது
என் ஆழ்மனம்
உடனே அருகிலிருக்கும் துரோகியை
உடன் அழைத்து சென்றாள்..

சிதைந்தது மனம்
இருந்தாலும் சித்திரம் போல் அவள்
சிறகடித்து பறந்தாள்
அவள் சரளம் நோக்கி
காத்திருந்தேன்...

மாலையானது
இரண்டு கருவண்டுகள் என்னை நோக்கின
என்ன பார்வை!!
அன்று புரிந்தேன்
பருவ நாயகர்களின்
பரிதவிக்கும் நிலையை..

வருடினாள்
இதழோடு இதழ் சேர்த்தாள்
அள்ளினாள்
தென்றலில் நடனமாடிய கூந்தலோடு
என்னை இணைத்தாள்..

இருள் கவ்வியது
விழா விழித்துக்கொண்டது
விழுந்தனர் பலர்
எம் இணைவை கண்டு..
புகழ்தனர் பலர்
என்னால் மேலும் அழகன அவளைக்கண்டு..
களிப்பில் முழ்கி
நாளை கனவுகளுடன்
கண்ணயர்ந்தேன்..

விழித்தேன்
பரிதவித்தேன்
பாதகி..
என்னை குப்பையில் வீசிவிட்டாள்
ஏன்? என்றேன்
வாடிவிட்டாய் என்றாள்
நாடி வந்தது நீயல்லவோ!! என்றேன்
அது நேற்று என்றாள்
குரல் அடைத்தது
உயிர் வலித்தது
விழி கனத்தது
ஏனோ அழமுடியவில்லை..
எதிரே அழுக்குச் சுவரில் ஒரு வாசகம்
"நீர்குமிழி வாழ்க்கை!!"

Wednesday, July 9, 2008

கீதையும்.. கீதாவும்..

சவரம் செய்கையில்
கீதையை படித்தார்
காந்தி... ஆதலால்
சாந்தமாக இருந்து..காந்தமாக இழுத்து.. முடிவில்
விதியை மாற்றினார்..
நானும்
சவரம் செய்கையில்
கீதாவை நினைத்தேன்..
விழுந்தது கீரல்
காதில் விழுந்தது என் வாடிக்கையாளரின் கூக்குரல்.. முடிவில்
வீதியை மாற்றினேன்..

பொருள்:
கீதையால் தருமம் அறியும்..
கீதாவால் தரும அடி அறியும்..

செயல் ஒன்று.. அனுபவம் வேறு..

மெழுகுதிரி அணைந்ததும்
தாஹுருக்கு தெரிந்ததாம்
நிலாவின் ஒளி..
ஊற்றெடுத்ததாம் கவிதை துளி..
நானும்
அணைத்தேன் திரியை..
விழுந்தததோ அடி..
ஏற்றியது எனது தந்தை ஆயிற்றே!!

Tuesday, July 8, 2008

முதற் பழம்..

கல்தோன்றிய காலத்தில்
கல்வெட்டில் கவிதை...
காலம் செல்லச் செல்ல
காய்ந்த ஒலையில் கவிதை...
காயும் மை தோன்ற
காகிதத்தில் கவிதை...
கலியுகம் முற்றிய வேளையில்
கணனியில் கவிதை...
கவிதை தங்குமிடம் மாறலாம்
ஆனால்...
கவிதை தாங்கும் கருத்து ஒன்றே!
அது
காயிந்து விழுந்த கற்பனை பழம்!!