Friday, May 15, 2009

மாய உலகின் சக்கரம்

கருத்த கானகம்
எட்டிய தூரமெங்கும்
நெடிந்து வளர்ந்த மரங்கள்
காட்டின் நடுவெ ஒரு
குட்டிக் குடும்பம்..

குடிசை இல்லையெனினும்
கும்மாளத்துக்கு குரையில்லை
ஆடைக்கு போராடினாலும்
அடுத்தவேளை உணவுக்கு பஞ்சமில்லை
அமைதியாக
ஆனந்தமாக வாழ்வை
அன்பின் எல்லைவரை அள்ளிச் சென்றன..

அவர்களின் ஆனந்தம்
அந்தக் கானக சொந்தக்காரியால் பொறுக்கமுடியவில்லை
அந்த ஒரு நாள்
தரை அதிர்தது
கிளைகள் இல்லா மரங்கள் கிளர்ந்தெழுந்தன
அயல் வீட்டு
அன்பழகு 'சுனாமி..சுனாமி..' என
கூச்சலிட
அறிந்து எழும்பமுன்
கண்ணெதிரே
கரும் அலை உருண்டுவந்தது...

"அய்யோ அம்மா.. பேன்.. பேன்"
அனிதா கூச்சலிட
அம்மா மறுபடியும்
அந்த கரும் சீப்பை
அந்த கரும் சிகைக்குள்
வாரினாள்...

No comments: